Tuesday, 4 July 2017

சுவாமி விவேகானந்தரின் நினைவு தினம் இன்று!

கடவுள் இருந்தால் அவனை நாம் காண வேண்டும். ஆத்மா இருந்தால் அதை நாம் உணர வேண்டும். அப்படி இல்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதைவிட நாத்திகனாக இருப்பதே மேல்என்று கூறிய சுவாமி விவேகானந்தரின் நினைவு தினம் இன்று.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. சாதி, மத ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக கலகக்குரல் கொடுத்த சமூக சீர்திருத்தவாதிகளில் முன்னோடியும் முக்கியமான நபரும்நரேந்திரநாத் தத்தாஎன்ற இயற்பெயர்கொண்ட விவேகானந்தர் முக்கியமானவர். மக்கள் சேவைக்கு முக்கியத்துவம் கொடுத்த ஆன்மிகத் தலைவர்.
சுவாமி விவேகானந்தர் அவர்கள், கொல்கத்தாவில் ஜனவரி 12, 1863இல் விஸ்வநாத் தத்தா என்பவருக்கும், புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. அவர் ஒரு துறவியாக மாறியபோது, தனது இயற்பெயரைசுவாமி விவேகானந்தர்என்று மாற்றிக்கொண்டார்.
இறை உண்மைகளைப் பற்றி அறிந்துகொள்வதற்காக, ராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரை முதன்முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. ராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால் பக்தி மார்க்கம் மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்துகொள்ள முடிந்தது. ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன.
சமூக சேவை என்பது ஒரு கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும்என்று அவர் உணர்ந்தார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துகளை அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். சுவாமி விவேகானந்தர் அவர்கள், 1897இல்ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன்என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் சிந்தனைகளையும், இலக்குகளையும் முறைப்படுத்தினார்.
கங்கை நதிக்கரையில் பேலூரில் அவர் கட்டடங்களைக் கட்டமைத்து, ‘ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்தைநிறுவினார். இந்திய பண்பாட்டின் மீதும் அதன் வேர்களின் மீதும் சர்வதேச கவனம் குவியும் வகையில் சிகாகோவில் அவர் ஆற்றிய உரை மட்டுமே பரவலாக அறியப்படுகிறது.
செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும் சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன்முன் நிறுத்து. அதிலிருந்து நல் செயல்கள் விளையும்என்று கூறி அதன்படி வாழ்ந்து காண்பித்தவர்.
1902ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அவரின் நினைவைப் போற்றுவோம்.

Saturday, 1 July 2017

யுத்தம்!



யுத்தம்!

யுத்தம், சமாதான பிரச்னைகளிலிருந்து தப்பிக்கும் கோழைத்தனமான முடிவு.

- பவுல் தாமஸ் மான் 

 (6 ஜூன் 1875 - 12 ஆகஸ்ட் 1955). ஜெர்மன் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், சமூக விமர்சகர், கொடையாளர், கட்டுரையாளர். 1903ஆம் ஆண்டு வெளிவந்த இவரது சிறுகதைத் தொகுப்பானட்ரிஸ்டன்புகழ்பெற்றது. அதனால், விரைவில் ஜெர்மனியின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராகப் புகழ்பெற்றார். இவரது படைப்புகள் நகைச்சுவை, வஞ்சப் புகழ்ச்சி, நையாண்டி ஆகியவற்றைச் சார்ந்திருக்கும்.
இந்தியாவைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டதி டிரான்ஸ்போஸ்டு ஹெட்ஸ்: லெஜண்ட் ஆஃப் இந்தியாஉள்ளிட்ட படைப்புகள் மிகவும் பிரபலமடைந்தன. இவை ஆசிய, ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன. 1929ஆம் ஆண்டு இலக்கியத்தில் இவரின் பங்களிப்புக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.